ரெண்டு சண்டை கோழிங்க கொஞ்சிக்குறாங்க” : ஃப்ரீஸ் டாஸ்க்கில் பாலா – ஆரி

by Web Team
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்றுமுதல் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. கன்டென்ட் இல்லாமல் திணறி கொண்டிருந்த பிக் பாஸின் வயிற்றில் ஷிவானி அம்மா எண்ட்ரி கொடுத்து பாலை வார்த்தார். ஷிவானியை வேற லெவலில் வச்சி செய்த அம்மா, ஆரிக்கு தனது வாழ்த்துகளை கூறினார்.இதை தொடர்ந்து பாலாவின் அண்ணன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து நீ பழைய மாதிரி உன் கருத்துல ஸ்ட்ராங்கா இரு என்று சொல்லிவிட்டு சென்றார். அந்த வகையில் ப்ரீஸ் டாஸ்க் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாலா சாப்பிட்டு கொண்டிருக்க பிக் பாஸ் பாலா ஃப்ரீஸ் என்று சொல்கிறார். அப்போது ஆரி சூடான பொங்கல் சாப்பிடு ராஜா சாப்பிடு என்று பாலாவை கொஞ்சிவிட்டு செல்ல, பிக் பாஸ், ஆரி ரீவைண்ட் என்று கட்டளை போடுகிறார் பிக்கி.

உடனே ஆரி பாலாவிடம் சாப்பிடு ராஜா என்று சொல்ல ஃப்ரீஸ் என்று அறிவிக்கிறார் பிக் பாஸ். சாப்பிடும் பாலாவை ஆரி கொஞ்சும் சீனை பார்த்துவிட்டு, ரெண்டு சண்டை கோழிங்க கொஞ்சிக்குறாங்க. எனக்கு இத பார்க்க பிடிக்கல; சண்டை போடுங்க என்று ரம்யா கமெண்ட் அடிக்கும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Related Posts

Leave a Comment