24 கேரட் தங்கத்தால் ஆன ஹோட்டல்- கை கால்கள் படும் இடமெல்லாம் தங்கம்- சாப்பாட்டிலும் தங்கமா?

by Web Team
0 comment

உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசிய சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்புடைய ஹோட்டல் ஒன்று செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இந்த ஹோட்டலானது, வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் அமைந்திருக்கிறது.

உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது வியக்க வைக்கிறது.

டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட பின்னர் உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள், கழிப்பறைகள் என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. ஹோட்டல் வசதிகளில் கூரையின் மேல் 24 காரட் தங்க-டைல்ட் உள்ளதாகவும், ஒரு இரவு 250 டாலர் (R3 800) தான் தொடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொடுக்கப்படும் உணவிலும் மர்மமான தங்கப் பொருளுடன் வழங்குவதாகவும், ஹோட்டலின் காபி கோப்பைகள் கூட 24 காரட் தங்கத்தால் ஆனவை என அங்கு சென்று வந்தோர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓட்டல் உலக அளவில் பிரபலமாகி உள்ளது. மக்கள் பலர் இந்த ஓட்டலை பார்ப்பதற்காகவே படையெடுத்து வரிசை கட்டி புக்கிங் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment