பிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது! NHS தலைவர் எச்சரிக்கை

by Web Team
0 comment

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளிவிற்கு உச்சத்தை எட்டியுள்ளதால் NHS தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவின் முதல் அலையின் போது அதிகபட்சமாக ஏப்ரல் 12 ஆம் தேதி 18,974 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தற்போது திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 20,426 நோயாளிகள் பிரித்தானியா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக NHS புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சுகாதார ஊழியர்களைப் பாராட்டிய NHS-ன் தலைமை நிர்வாகி சர் சைமன் ஸ்டீவன்ஸ் , பிரித்தானியா இப்போது மீண்டும் (கொரோனா) புயலின் கண் பகுதியிக்குள் இருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்மில் பலர் குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்களை இழந்துவிட்டோம். நிறைய பேர் கவலை, விரக்தி மற்றும் சோர்வாக உணர்கிறார்கள்.

வசந்த காலத்தின் பிற்பகுதியில் தொடர்ந்து தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்பதால், நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடியும்.

இது அநேகமாக எதிர்வரும் ஆண்டிற்கான மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு முதல் தடுப்பூசிகளைப் பெற்ற நோயாளிகளுக்கு, இரண்டாவது டோஸ் போடப்படும் என்று சைமன் ஸ்டீவன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே கடினமான ஒரு வருடத்தில் NHS மீதான அழுத்தம் தொடர்ந்து வளர்ந்து வருவதால் NHS ஊழியர்கள் கவலை, விரக்தி மற்றும் சோர்வாக உள்ளனர் என NHS-ன் தலைமை நிர்வாகி சர் சைமன் ஸ்டீவன்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment