இலங்கையில் மக்கள் அச்சம்!

by Lankan Editor
0 comment

இலங்கையில், புதுக்குடியிருப்பு சுகாதார அதிகா ரி பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத் தொற்றானது ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸை விட வீரியம் கூடியதாக காணப்படுவதால், மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மேற்குறிப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி .ஆர் பரிசோதனை மூலம் இக்கொரோனா தொற்று இருப்பதற்காக தெரியவந்துள்ளது.

இக்குறித்த நபர் தம்புள்ள சந்தைக்குச் சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வியாபாரம் செய்பவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் குறித்த பகுதியில் பல பொதுமக்களோடு தொடர்பை பேணியிருந்தமையினால், அவரோடு தொடபில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என வட மாகாண சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளது.

அத்துடன் வடமாகாணத்தில் இருக்கும் மக்கள் கொரோனா உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தால், உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு தொற்றுதல் ஏற்படுதலை தவிரக்க முடியும்.

Related Posts

Leave a Comment