தொடர்ந்து அழுது கொண்டிருந்த 5 மாத குழந்தை: தீயிட்டு கொளுத்திய தாய்

by Web Team
0 comment

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை தாயே தீயிட்டு கொளுத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குட்டி சிங் கோந்த் என்ற பெண்ணுக்கு ஐந்து மாத ஆண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில் குட்டி சிங் கோந்துக்கு சில மாதங்களாக மனநல பிரச்சனை இருந்து வந்ததாம்.

இதற்கிடையே அவருடைய 5 மாத குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது, இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், குழந்தையை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாமியார், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் குட்டி சிங் கோந்தை மீட்டு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர், விசாரணையில் என்ன நடந்தது என தனக்கு தெரியவில்லை என கூறினாராம்.

இருப்பினும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment