பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்திய சோம்? காட்டுத் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய வீடியோ!

by Web Team
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் கமல் சார் எபிசோடில் சோமசேகர் செல்போன் நோண்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்று பலர் சொல்லி வரும் நிலையில், இந்த வீடியோவையும் அதற்கு ஆதாரம் ஆக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் குடும்பத்தாரிடம் கூடவும் தனியாக பேச அனுமதி இல்லை என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் கமல் சார் அனிதா சம்பத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது சோமசேகர் செல்போன் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அது தொடர்பான விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

Related Posts

Leave a Comment