ஹவுஸ்மேட்டிடம் காலர் கேட்ட கேள்வி!

by Lifestyle Editor
0 comment

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்கள் ஆகிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, ரமேஷ், நிஷா, அர்ச்சனா என 8 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது 9 பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் ஒருவர் வெளியேறவுள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அந்நியன் படத்தில அம்பி என்ற கேரக்டர் வரும். அதை யாருமே விரும்ப மாட்டாங்க. அதுல அவர் ரூல்ஸ் ரெகுலேஷன்னு பேசிட்டு இருப்பாங்க. பிக் பாஸ் வீட்டுல எல்லாரும் சராசரி மனுஷனா வலம் வரும் போது நீங்க மட்டும் ரூல்ஸ் பேசிட்டு இருக்குறது, இணக்கமான சூழலை பாதிக்காதா? என்று ஆரியிடம் காலர் ஒருவர் கேட்கிறார்.

அதற்கு பதிலளிக்கும் ஆரி, இங்க இணக்கம் பண்ண வரலன்னு பிக் பாஸ் சொல்லிட்டாரு. நான் எல்லார் மீதும் கேள்வி வைப்பது குற்றம் வைக்க அல்ல. அவர்களை இன்னும் தகுதி பண்ணிக்க வைக்கும் கேள்வியாக தான் நான் பார்க்கிறேன்”

Related Posts

Leave a Comment