“6ஆம் வகுப்பு பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவர்”

by Lifestyle Editor
0 comment

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் இருந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வரும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ல்வி தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்றும் தமிழ்ப் பற்று மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ள அவர், எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து திருவள்ளுவரை அவமதித்ததாக பாஜகவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment