பிறந்த 3 நாட்களே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு

by Lifestyle Editor
0 comment

அரியலூர்

அரியலூரில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசுவை, மர்மநபர்கள் சாலையில் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் வெளியே இன்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் காப்பக ஊழியர்கள் வெளியே சென்று பார்த்தபோது, பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு ஒன்று சாலையில் கேட்பாரற்று கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அந்த குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் குழந்தைக்கு பால் ஊட்டினர். இந்த சம்பவம் குறித்து காப்பகம் சார்பில் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து, பெண் சிசுவை சாலையில் விட்டுச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment