பிரபல நடிகர் மரணம்! கண்முன்னே பறிபோன உயிர்!

by Lifestyle Editor
0 comment

இந்த 2020 ம் வருடம் முடிவடைய இன்னும் 4 நாட்களே மீத மிருக்கின்றன. ஃபேன்ஸி நம்பர் போல இருக்கும் ஆண்டை வரவேற்றது 2019 கடைசி நாள் வரை வரவேற்ற நாம் போகட்டும் டா சாமி என சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.

இதே ஆண்டில் சினிமாவில் நிறைய மரண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் அடுத்ததாக மலையாள சினிமாவின் பிரபல நடிகர் நெடுமங்காடு அனில் அண்மையில் காலமாகிய செய்தி வெளியாகியுள்ளது.

20 வருடங்கள் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அனில் மலையாள சினிமாவில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகி வந்தன. அண்மையில் எதிர்ப்புகளுக்கு நடுவே ஓடிடியில் வெளியாகி ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தில் போலிஸாக அனில் நடித்திருந்தார்.

பீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த அவர் இடுக்கி அருகே தொடுப்புழாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.படப்பிடிப்பு முடிந்த பின் குளிப்பதற்காக மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் சென்ற அவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதில் சிக்கி நீரில் மூழ்க அவரின் நண்பர்கள் அவரை மீட்க போராடியுள்ளனர்.

பின்னர் சிரமத்துடன் அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்ற போது போகும் வழியலேயே அனிலின் உயிர் பிரிந்தது கண்டு சோகத்தில் மூழ்கினர்.

அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறதாம்.

பேட்ட நடிகர் மணிகண்டன், மம்முட்டி, மோகன் லால், கலாச்சார அமைச்சர் ஏகே பாலன் ஆகியோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment