சூர்யா ஒரு நடிகராக தன்னை தானே செதுக்கி, தன் மீதான விமர்சனங்களுக்கு விடை கொடுத்து வருகிறார். அகரம் அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற பல மாணவ மாணவிகளுக்கும் கல்விச்சேவை புரிந்து வருகிறார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடனும் திறமையிருந்தும் பல மாண மாணவிகள் தோல்வியால் தற்கொலை முடிவு வரை செல்லும் அவலத்தை எதிர்த்து நீட் தேர்வு விசயத்தில் குரல் கொடுத்தார்.
இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும் பக்குவத்துடன் நிலைமையை எடுத்துரைத்தார். சூரரை போற்று படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. நல்ல விமர்சனங்களையும், நிறைய பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது.
2020 ல் அதிகம் பேசப்பட்ட படம் என்ற சிறப்பையும் டிவிட்டரில் பெற்றது. இந்நிலையில் சூர்யாவின் சாதனையை கொண்டாடும் விதமாக #KollywoodRulerSURIYA டேக் இட்டு டிவிட்டரில் கொண்டாடி 16 மணி நேரத்தில் 1 மில்லியன் ட்வீட்ஸ் செய்து மகிழ்ந்துள்ளனர்.