கோபத்தில் ஒரு கணவர் செஞ்ச வேலை.

by Lifestyle Editor
0 comment

ஆண் குழந்தை பிறக்காத கோபத்தில் ஒரு தந்தை தனக்கு பிறந்த ஒரு வயது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .
உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மொஹமட் சந்த் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உஸ்மா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.ஒரு வியாபாரியான சந்த் அவரின் காதல் மனைவியிடம் கல்யாணமான நாள் முதல் ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார் .இந்நிலையில் அவரின் மனைவி உஸ்மா கர்ப்பமானார் .அவர் கர்ப்பமான நாள் முதல் அவரின் கணவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆசையாய் இருந்தார் .ஆனால் அந்த பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததும் அவர் ஏமாற்றமடைந்தார் .

அவருக்கு பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அந்த சந்த் அந்த குழந்தையை கொஞ்சாமல் வெறுப்புடன் வளர்த்து வந்துள்ளார் .அதன் பிறகு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று இந்த ஆண் குழந்தை விவகாரத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை வந்துள்ளது .அதன் பிறகு அந்த மனைவி தூங்க சென்று விட்டார் .அப்போது அந்த கணவர் தன்னுடைய ஒரு வயது மகளின் தலையை தரையில் அடித்து கொலை செய்துள்ளார் .அதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .அதன் பின்னர் தூங்கி எழுந்த அந்த தாய் தன்னுடைய குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .அதனால் அந்த தாய் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது தன்னுடைய பெண் குழந்தையை கொலை செய்ததாக புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் கணவரை கைது செய்தார்கள் .

Related Posts

Leave a Comment