கள்ளக்காதல் தகராறில் காதலிக்கு ஏற்பட்ட கதி

by Lifestyle Editor
0 comment

12 ஆண்டுகளாக கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஒரு கள்ள காதலியை அவரின் காதலன் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

மும்பையின் வோர்லியில் 44 வயதான ஒரு பெண் அங்குள்ள ஒரு வாலிபருடன் கள்ள காதலில் ஈடுபட்டு வந்தார் .ஒரு தச்சரான அந்த வாலிபர் அந்த பெண்ணின் வீட்டுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு மர வேலைகள் செய்ய வந்தார் .அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது .அதன் விளைவாக இருவரும் கடந்த 12 ஆண்டுகளாக கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழந்து வந்தார்கள் .சமீபத்தில் அவர்கள் அந்த ஊரிலிருந்து மத்திய மும்பைக்கு குடி வந்தார்கள் ,அங்கு வந்த நாள் முதல் இருவருக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது .அதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரே வீட்டில் தனி தனியாக வசித்து வந்துள்ளார்கள் .

இந்நிலையில் கடந்த வாரம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வந்துள்ளது .அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அந்த வாலிபர் தன்னுடைய கள்ள காதலியிடம் ‘நீ வேண்டுமானால் என்னை விட்டு பிரிந்து போய்க்கோ நான் வேறு திருமணம் செய்து கொள்கிறேன்‘ என்று கூறி சண்டை போட்டுள்ளார் .அதனால் கோபப்பட்ட அந்த பெண் ‘இந்த வயசுக்கு அப்புறம் நான் எங்கு போவது‘ என்று கூறியுள்ளார் .அதனால் அந்த காதலன் கோபப்பட்டு அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து ,அவரின் தலையை ஒரு இரும்பு தடியால் அடித்து நசுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட்டார் .பின்னர் அக்கம்பக்கத்தினாரால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள் .பின்னர் தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகிறார்கள் .

Related Posts

Leave a Comment