மதுரையை மாஸாக வளைத்த சூரி..!

by Lifestyle Editor
0 comment

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் நினைவுக்கு வருதோ இல்லையோ வித விதமான சாப்பாடுகளை இஷ்டத்துக்கும் வெட்டலாம் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும்!

எத்தனை ஹோட்டல்கள் வந்தாலும் டேஸ்ட் சரியா இருந்தால் கூட்டம் கட்டியேறும் என்பதற்கு உதாரணம் நடிகர் சூரியின் அய்யன் – அம்மன் ஹோட்டல். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் ஹோட்டலை ஆரம்பித்தார். சிவகார்திகேயன்தான் திறந்து வைத்தார். இதுவரை 14 பிரான்ச் திறந்திருக்கிறார். வெஜ் ஹோட்டல் தனி, நான் வெஜ் ஹோட்டல்கள் தனி என்று இருந்தாலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருப்பதால்தான் குறைந்த நாட்களில் இவ்வளவு பெரிய சக்ஸஸ் கொடுக்க முடிந்தது என்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் நடிகர்கள்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஹோட்டலில்தான் இருப்பாராம். ஹோட்டல்கள் சிறப்பா இருக்க மாஸ்டர்கள் ரொம்ப முக்கியம். அதை மிஸ் பண்ணியதால் சென்னையில் பிரபல சைவ உணவகத்தில் டேஸ்ட் முந்தி மாதிரி இல்லை என்கிற கமெண்ட் முகநூல் முழுக்க கொட்டிக் கிடக்கு. அப்படி எதுவும் நடந்திரக்கூடாது என்பதால் சூரியின் அம்மாவின் கை பக்குவம்தான் எல்லாத்துக்கும் காரணமாம்.

சூரியின் தற்போதைய ஆசை, உலகம் முழுக்க பிரான்ச் ஆரம்பிச்சு குறைந்த விலையில் இதே டேஸ்டோடு கொடுக்கணும் என்பதுதானாம். அவ்வளவு பரோட்டோவையும் சாப்பிட்டு முடிச்சிட்டு ‘கோட்டை அழிங்க நான் மறுபடியும் வாரேன்னு’சொல்றப்பவே தெரியும்… இப்படித்தான் ஒரு நாள் நடக்கும்னு., அடுத்த பிரான்ச் எங்க சென்னையா ; வாங்க ராசா.

Related Posts

Leave a Comment