அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

by Lifestyle Editor
0 comment

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில புல்லுருவிகள் அதிமுகவை அழிக்க நினைத்தனர் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டம் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் தொடங்கியது.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறத.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக. அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது அதிமுக அரசு . ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக அரசு; அடுத்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் புதிதாக 1650 மருத்துவ இடங்கள் உருவாகும். அதிமுக ஆட்சியை விமர்சிப்பவர்கள் வீட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது. சில புல்லுருவிகள் அதிமுகவை அழிக்க நினைத்தனர். அந்த முயற்சி தவிடுபொடியாக்கப்பட்டது.

பிரிந்த பின் மீண்டும் இந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. அதிமுகவை மீண்டும் ஒன்றாக இணைத்த பெருமை ஜெயலலிதாவையே சேரும்; ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் பூமி உள்ளவரை இருக்கும். அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் விழுந்து போவார்கள். இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சராக உள்ள ஒரே கட்சி அதிமுக . சாதாரண தொண்டனுக்கும் கதவை தட்டி பதவி வழங்கும் கட்சி அதிமுக. நான் இன்று முதல்வர் ஆக இருக்கலாம் ஓபிஎஸ் இருக்கலாம்; நாளை தொண்டர்களில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளது. ” என்றார்.

Related Posts

Leave a Comment