சனி பெயர்ச்சி விழா – குச்சனூர்

by Lifestyle Editor
0 comment

தேனி

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நடந்த பரிகார பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வழிபாடு நடத்தினர்.

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில், சனிப் பெயர்ச்சி நிகழ்ச்சியையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5.22 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனீஸ்வரர் பிரவேசித்தார்.

இதனையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்களான மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் சனி திசை, ஏழரை சனி, ஜென்ம சனி நடப்பவர்கள் என ஆயிரக்கணக்கில் வந்து இருந்தனர்.

சனிப் பெயர்ச்சி பரிகாரத்தின் போது சனீஸ்வரர்க்கு, இலாட்ச்சார்ச்சனை மற்றும் வாரந்தோறும் சனிப்பரிதி ஹோமம் நடந்தன. மேலும், பக்தர்கள் வேண்டிய படி சிறப்பு பரிகார பூஜைகளும் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றியும், சனீஸ்வர பகவானுக்கே, உகந்த காக்கை வாகனத்தை தலையில் சுமந்து உடைத்தும் வழிபாடு நடத்தினர்

மேலும், பரிகார பூஜைகளில் கலந்துகொண்டு, இங்குள்ள சுரபி நதியில் நீராடினர். சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை முன்னிட்டு குச்சனூர் கோவில் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Posts

Leave a Comment