அனிதாவை துல்லியமாகக் கணித்த ஆரி

by Lifestyle Editor
0 comment

பாலா முதன்முறையாக கேப்டன்ஷிப் ஏற்றிருந்த வாரம் இது. அதனால் பல சண்டைகள், வெட்டுக்குத்துகள் விழும் என எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், பாலாவால் நிகழ்ந்த சண்டைகள், சச்சரவுகள் ரொம்பவே குறைவு. ஆனால், அது எங்க ஏரியா என்று சண்டை போட்டவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் யார் .. என்ன சண்டை… எப்படி பஞ்சாயத்து நடந்தது என்பதைக் கட்டுரையில் பார்ப்போம்.

கமல் வருகை

எழுத்தாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் கமல்.

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்

குத்து டான்ஸ் ஆடுவதுபோல பாட்டுப் போட்டார் நம்ம பிக்கியின் தம்பி. ஆனால், ஹவுஸ்மேட்ஸ் திருமண வீட்டுல சீக்கிரம் எழுந்தமாதிரி என்ன செய்வது எனக் குழம்பி நிற்பதைப் போல நின்றனர். ரம்யா வழக்கம்போல செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

பாட்டு முடிந்ததும், யார் எவிக்‌ஷனாவார் என்று கிச்சனில் ரம்யா சொல்லிக்கொண்டிருந்தார். ’அநேகமாக அனிதா. ஆனா, அவர் இங்கேயே இருந்தா நல்லா இருக்கும்’ என்றார். வெளியே அனிதா ஆரியிடம் அணத்திக்கொண்டிருந்தார்.

அவருக்கு தான் வெளியே போய்விடுவோம் என்ற நினைப்பு எந்த வாரத்தையும் விட, இந்த வாரம் அதிகமாக வந்துவிட்டது. ரியோ அண்ட் குரூப், கேபி போய்விடுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தால், போகமாட்டார் என்று மூட நம்பிக்கையோடு சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

லக்ஸரி பட்ஜெட் 1800 பாயிண்ட் கிடைக்க, ஹேப்பியோடு பொருட்களை வாங்கினார்கள்.

அடுத்த நாள்

காலையில் ரவா உப்புமாவை ரவையும் உப்புமாவையும் தனியே சமைத்து விட்டார்கள் போல. அதனால், சோம் திண்டாடிக்கொண்டிருந்தார். கிச்சன் மேடை சுத்தமாக இல்லை என்று வழக்கம்போல கேபி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.

கமல் வருகை

சுனாமியின் கொடூரங்களைப் பற்றி பேசித் தொடங்கினார். தசாவதாரம் பற்றி பேசாமல் முடித்தது ஆச்சர்யம்தாம். கமல் அணிந்துவந்த கதர் ஆடையைப் பற்றி மீண்டும் பேச, ஹவுஸ்மேட்ஸ் தலையாட்ட… இது போன வாரமா.. இந்த வாரமா.. என்ற குழப்பம் ஆடியன்ஸ்க்கு.

பருப்பு சண்டை பற்றி கேட்க, மீண்டும் விசித்திரமான விளக்கத்தைக் கொடுத்தார் அனிதா. அப்போது அனிதாவைப் பற்றி துல்லியமாக ஒன்றைச் சொன்னார். “அனிதா தன் தவறு வெளியே தெரிந்துவிடாமல் தெளிவாக ப்ளான் பண்ணி மற்றவர்களைக் குழப்பி விடுகிறார். அதனால், அவரோடு பேசவே பயமாக இருக்கு” என்றார். ஆமாம் என்பதுபோல ரியோவும் தலையாட்டினார்.

இது ஆடியன்ஸ்க்கு தெரிந்து பல வாரங்களாயிற்று. ஆனால், 24 மணி நேரமும் சேர்ந்து இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் இவ்வளவு நாள் ஆகிடுச்சு என்பது ஆச்சர்யம்தான். ஆனால், அதற்கு ஒரு விளக்கம் சொல்லி அசர வைத்தார் அனிதா.

தவறான பருப்பை ஊற வைத்தது. அதில் வேறு பண்டம் செய்யலாம் என முடிவு எடுத்தது அனிதா. அப்படிச் செய்ய மறந்தது அனிதா. அதைக் கொட்ட முடிவு எடுத்தது அனிதா. கொட்டாமல் விட்டது அனிதா. ஆனால், இதை எப்படியெல்லாம் மாற்றலாமோ அப்படி மாற்றினார். இறுதியாக, பாலா ஹார்ஷாக பேசியதால் தான் ஸாரி கேட்க வில்லை என்று பழியை பாலா மீது போட்டு விட்டார். இப்போது பஞ்சாயத்து முடிந்து தன் மீதுதான் தப்பு என்று முடிந்தாலும், ‘ஆஜித் தான் முதல்ல இது அவ்வளவு பெரிய இஷ்யூ இல்ல’னு சொன்னான். அதை ஃபாலோ பண்ணிதான் நான் சொன்னேன். என் மேல தப்பு இல்லன்னு புது வண்டியை கிளப்பிட்டாங்க. இதைத்தான் சரியாக ஆரி கணித்து சொன்னார் என நினைக்கிறேன்.

அனிதாவின் குடும்பத்தினர் பற்றி ஆரி பேசியதை லேசாகக் கண்டித்தார் கமல். ஆனால், அனிதாவுக்கு பின்னடைவாகவே அது அமைந்தது.

பாலாவின் கேப்டன்ஷிப் பற்றி விசாரிக்கையில் எல்லோரிடம் நல்ல அபிப்பிராயமே இருந்தது. நிறைய ப்ளஸ் சொல்லி, ஓரிரு மைனஸ் மட்டுமே சொன்னார்கள். ஆஜித் கலாய்த்தது சிரிக்க வைத்தது. பாலாவுக்கு இந்த சீசன் தொடங்கிய ஓரிரு வாரங்களில் கேப்டன்ஷிப் கொடுத்திருந்தால் பலரை அவர் காயப்படுத்தாமல் இருந்திருப்பார்.

டின்னர் நானே சமைத்துவேன் என கேபி சொன்னதும், ‘ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்டுதான் வெளியே போறீங்க’ என்றார் கமல். உடனே கேபி ‘ஓ! வெளியே போறேனா?’ எனக் கேட்டு கமலையே அசர வைத்தார்.

இறுதியாக, ஆரியைப் பற்றி நீண்ட விளக்கத்தைக் கமல் கொடுக்கும்போதே அவர் எவிக்‌ஷனலிருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிந்தது அதுவே நடந்தது. அநேகமாக எல்லோரும் சொல்வதுபோல அனிதா இன்று வெளியேற வாய்ப்பு அதிகம். அனிதா வெளியேற வேண்டும் என பலர் நினைக்கக்கூடும். ஆனால், அவரும் போய்விட்டால் கண்டண்ட்க்கு நான் எங்கே போவேன் என்று பிக்பாஸ் சத்தமாகவே கேட்பார்.

Related Posts

Leave a Comment