ஐ.எஸ்.எல். கால்பந்து

by Lifestyle Editor
0 comment

கோவா:

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 39-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணியில் 13-வது நிமிடத்தில் சாங்தே அருமையாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் சென்னை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் 59-வது நிமிடத்தில் பெங்கால் வீரர் மேட்டி ஸ்டெயின்மான் ‘கார்னர்’ பகுதியில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். தொடர்ந்து 64-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ரஹிம் அலி கோல் போட்டார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 68-வது நிமிடத்தில் பெங்கால் வீரர் ஸ்டெயின்மான் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 9 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஈஸ்ட் பெங்கால் அணி 3 டிரா, 4 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஐதராபாத் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Posts

Leave a Comment