அமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு! 41 கட்டிடங்கள் சேதம், 3 பேர் காயம்.

by Lankan Editor
0 comment

அமெரிக்காவில் உள்ள ‘நாஷ்வி’ நகரத்தின்மீது வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தினத்தன்று அதிகாலை குண்டு வெடிப்பு நடைப்பெற்றுள்ளது.

இக்குண்டு வெடிப்பால், அதனை அண்டிய பிரதேசங்களில் 41 கட்டிடங்கள் சேதமடைந்ததுடன்,3 பேர் காயத்திற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைற்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் உயிருக்கு ஆபத்து இல்லை.

இந்த பதற்ற நிலை காரணமாக பொலிசாரின் தகவலுக்கமைய குண்டு வெடிப்பு நடந்த பிரதேசத்திலும் அதற்கு அண்மைய பிரதேசங்களிலும், வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியிலிருந்து ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது திட்டமிடப்பட்ட செயல் என்று அமெரிக்கா பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment