கமலிடம் சிக்குவாரா பாலா…. கிழித்து தொங்கவிட்டு வரும் ரசிகர்கள்!

by Web Team
0 comment

கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அத்தனை போட்டியாளர்களும் சந்தோஷமாகவும் எந்தவொரு பேகேஜும் இல்லாதவர்கள் போல நல்லாவே நடித்தனர்.

கடைசியாக லைம் லைட்டை பிடிக்க பாலாஜி முருகதாஸ், கொடுக்கப்பட்ட பிரியாணி உணவை சாப்பிடுவதற்கு முன்பாக போட்ட ஒரு பிட் இருக்கே, அப்பப்பா சீக்கிரமே சினிமாவில் சான்ஸ் கிடைத்து விடும்.

வெள்ளிக்கிழமையான போதும் பாலாவுக்கு ஞானோதயம் பிறந்திடும் என நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் வாரத்தின் தொடக்கத்தில் சண்டை கோழியாக சீறுவதும், எப்படி ஆரியை வீட்டை விட்டு வெளியேற்றுவது. ரியோவின் அன்பு டீமை காலி பண்ணுவது என பக்காவாக பிளான் போட்டு நரி முகத்தை அப்படியே காட்டுவார் பாலாஜி முருகதாஸ்.

ஆனால், வெள்ளிக்கிழமையான போதும், அப்படியே ஞானோதயம் பிறந்து அப்படியே நல்லவன் வல்லவன் ரேஞ்சுக்கு மாறிவிடுவார் பாலாஜி முருகதாஸ். கிறிஸ்துமஸ் தின எபிசோடிலும் ரியோ, ஆஜீத், ஷிவானி எல்லாம் பிரியாணியையும், லெக் பீஸையும் வச்சு ஒரு பக்கம் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் ஏசுவாகவே மாறி பாலா பேசிய பேச்சு ஷப்பா முடியவில்லை.

வெள்ளிக்கிழமை ஆனால், போதும் ஆரி அண்ணாவிடம் அதை கற்றுக் கொண்டேன், ரியோ பிரதரிடம் இதை கற்றுக் கொண்டேன், ரம்யா சிறந்த போட்டியாளர், ஷிவானிக்கும் ஸ்கோர் போடுவேன், ஆஜீத்திடமும் ஐஸ் வைப்பேன் என இன்றைக்கு கொஞ்சம் மப்பு ஓவர் ஆகிடுச்சு போல, கத்துக்கிறேன் என பேசிய பாலாவை பார்த்து நெட்டிசன்கள், திங்கட் கிழமை கால வாரத்தானே என பங்கம் செய்து வருகின்றனர்.

இந்த வாரமாவது கமல் சார் பார்த்து பாலாவை சுளுக்கெடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை.

Related Posts

Leave a Comment