பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு அறிமுகம்! ரஷ்யா புதிய ஆணை

by Web Team
0 comment

பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ரஷ்ய புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 79.3 மில்லியனை எட்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 17,41,000-க்கும் அதிகமாக உள்ளது.

இதற்கிடையே பல நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்ட தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் பெரியளவில் தடுப்பூசி பிரச்சாரங்கள் தொடங்கப்படுகின்றன.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக அறிவித்ததை அடுத்து பிரித்தானியாவுக்கு பல உலக நாடுகள் பயணத்தடை விதித்தது.

தற்போது பல நாடுகள் தடையை நீட்டித்தாலும், சில நாடுகள் தடை நீக்கி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவுக்கு வருபவர்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டும் என ரஷ்யாவின் தலைமை பொது சுகாதார மருத்துவர் Anna Popova புதிய ஆணை வெளியிட்டுள்ளார்.

விமானக் குழுவினரை தவிர பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து ரஷ்யாவுக்கு வரும் மக்கள் தங்குமிடங்களில் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் அல்லது வந்த நாளிலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று புதிய ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment