சித்ராவின் கடைசி நிமிட காட்சிகள்: வைரலாகி வரும் காணொளி

by Web Team
0 comment

சின்னத்திரையில் பிரபல நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது கடைசி காணொளி காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் சித்ரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது வருங்கால கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இறப்பதற்கு சில மணிநேரங்கள் முன்னாடி வரையில் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் சித்ராவின் க்யூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் வகையில் சித்ரா கடைசியாக நடித்த காட்சி இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

அதனை ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment