புதிய கொரோனா வைரஸின் புதிய 7 அறிகுறிகளை வெளியிட்ட இங்கிலாந்து சுகாதாரத்துறை- என்னென்ன அறிகுறிகள் தெரியுமா?

by Web Team
0 comment

கொரோனா தொற்றில் இருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவுவதால் மீண்டும் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். மேலும் இந்த பழைய வைரஸ்(கொரோனா -Covid 19) விட 70 சதவீதம் வேகமாக பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், உருமாற்றம் பெற்ற இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து புதிய 7 அறிகுறிகளை இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில், ஏற்கனவே கொரோனா அறிகுறிகளை சேர்த்து, சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகளை அறிவித்துள்ளது.

இங்கிலாந் சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment