மராத்தான் போட்டியில் சாதனை படைத்த 5 மாத கர்ப்பிணி: குவியும் பாராட்டுகள்

by Web Team
0 comment

இந்தியாவில் 5 மாத கர்ப்பிணியாக இருந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பெங்களூரில் நடைபெற்ற டிசிஎஸ் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர்.

இதில் அங்கீதா என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணும் கலந்து கொண்டதுடன், 10 கிலோ மீட்டர் தூரத்தை 62 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்து உள்ளார்.

போட்டியின் தொடக்கம் முதலே தைரியத்துடன் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த அங்கீதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இவரது இந்த செயல் மற்ற கர்ப்பிணிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Related Posts

Leave a Comment