சிட்னியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நடராஜன்

by Web Team
0 comment

இந்திய அணிக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக கிடைத்தவர் தமிழக வீரர் நடராஜன்.

ஐபிஎல் தொடரில் தன்னுடைய பந்துவீச்சு திறனால், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பின்னர், டி20 தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட் சாய்த்து தன்னுடைய திறனை உலகுக்கு காட்டினார் நடராஜன்.

ஆனாலும், டெஸ்ட் தொடருக்கான அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் நெட் பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் தேவாலயம் முன்பு நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருடன் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் உள்ளார்.

Related Posts

Leave a Comment