புதருக்குள் சடலமாக கிடந்த சினேகா: காதலனின் வெறிச்செயல்

by Web Team
0 comment

இந்தியாவில் 19 வயது இளம் பெண்ணை, அவரது முன்னாள் காதலன் தீ வைத்து எரித்த சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா. 19 வயதான இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சினேகலதா, கொத்தனால் வேலை செய்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.. அக்ரிமென்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்திருக்கிறது.

வேலைக்கு போனதில் இருந்தே, ராஜேஷூடன் சினேகா பேசுவது குறைந்து போயுள்ளது. இது போன்ற நிலையில் தான் நேற்று வேலைக்கு சென்ற சினேகா வீடு திரும்பவேயில்லை.

இதனால் பதறிபோன பெற்றோர் பல இடங்களில் மகளை தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை என்பதால், தர்மாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின்பேரில் சினேகாவை பல இடங்களில் தேடிய போது, ஒரு புதருக்குள் சினேகாவை சடலமாக கண்டுபிடித்துள்ளனர். சடலத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அவரின் செல்போனை ஆராய்ந்து பார்த்த போது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ராஜேஷ் இடம் இருந்து 1600-க்கும் மேற்பட்ட முறை போன் கால் வந்துள்ளது.

இதையடுத்து ராஜேஷைப் பிடித்து பொலிசார் விசாரித்த போது, நான் ஒரு வருடமாக அவளை தீவிரமாக காதலித்து வந்தேன்.

ஆனால், அவர் திடீரென்று என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். என்னால் தாங்க முடியவில்லை. அதுமட்டுமின்றி அவள் பிரவின் என்பவருடன் பழகி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது.

இதனால், சினேகாவிடம் இது குறித்து பல முறை கூறியுள்ளேன். ஆனால் அவள் இதை மதிக்காமலே இருந்தாள். இதன் காரணமாக சினேகாவை தனியாக அழைத்துச் சென்று, துரோகம் செய்ய நினைத்ததால் கழுத்தை நெரித்து கொன்று புதருக்குள் வீசிவிட்டு, யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது, என்பதற்காக சடலத்தை தீ வைத்து கொளுத்தினேன் என்று கூறியுள்ளார்.

பொலிசார் ராஜேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment