இன்று வியாழக்கிழமை கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இரவு 8 மணிமுதல், காலை 6 மணிவரை நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு இன்று ஒருநாள் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்போது எவ்வித ஆவணங்களும் இன்றி இரவில் பயணிக்கலாம். அதேவேளை, பொதுபோக்குவரத்துக்களின் சேவை நேரமும் அதிகரிக்கப்படுள்ளது.
பேருந்து, மெற்றோ மற்றும் ட்ராம் சேவைகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் மேலதிகமாக இயங்கும். நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவுக்கு வரும் மெற்றோக்கள் அனைத்தும் 2.30 மணிவரை சேவையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.