கொரோனா இன்னும் 10 ஆண்டுகளுக்கு நம்முடன் தான் இருக்கும் – பயான்டெக் தலைவர் எச்சரிக்கை

by Web Team
0 comment

கொரோனா ஒருபுறம் தீவிரமாக பரவி வருகிற சூழ்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பு மருண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து அவசர அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகள் இருக்கும் என பயான்டெக் தலைவர் உகுர் சாஹின் தெரிவித்துள்ளார். பைசர் நிறுவனத்துடன் இணைந்து உலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை உருவாக்கிய ஜெர்மன் நிறுவனம் தான் பயான்டெக்.

கொரோனாவை கட்டுப்படுத்த உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வரும் சூழலில், அமெரிக்க மருந்து நிறுவனமான பைசருடன் இணைந்து ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியது.

இந்நிலையில், பயான்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா இன்னும் 10 ஆண்டுகள் நம்மிடையே தான் இருக்கும். அதன் தாக்கம் இருந்துக்கொண்டே தான் இருக்கும். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். உலக மக்கள்தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதால் பரவுதலை தடுக்க போதுமானதாக இருக்குமா என்பது நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொறுத்தது.

வைரசின் வீரியம் அதிகமானால், அதிகளவிலான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். பிரிட்டனில் இருந்து பரவியுள்ள உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசை எங்களின் தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியுமா என்பதை அறிய இன்னும் 2 வாரங்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

Leave a Comment