இதய துடிப்பு நின்ற யானைக்கு உயிர்கொடுத்த சம்பவம்

by Web Team
0 comment

தாய்லாந்தில் சாலை விபத்தில் இதயதுடிப்பு நின்ற யானை குட்டிக்கு இளைஞர் ஒருவர் உயிர்கொடுத்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்தின் சாந்தாபூரி எனும் பகுதியில் சாலையை கடக்க முயன்ற யானை குட்டி மீது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த யானை குட்டி உயிரில்லாத சடலம் போல சாலையில் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வன மருத்துவர்கள், யானையில் இதயம் இருக்கும் பகுதியை 2 கைகளால் அழுத்தினர்.

சுமார் 10 நிமிடங்களுக்கு இப்படி செய்ததும் யானைக்கு இதயத்துடிப்பு சீரானது, இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment