பிரபல சீரியலில் தோன்றிய புதிய முல்லை… இவரது தோற்றமும், குரலும் எப்படி இருக்குனு பாருங்க

by Web Team
0 comment

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி தனியார் நடச்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் இந்த தற்கொலை இன்றுவரை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே உள்ளது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி முல்லையாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துவரும் காவ்யாதான் முல்லையாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக காவ்யா நடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை சித்ராவுக்கு பின்னணி குரல் கொடுத்த அதே பெண் தற்போது கவியாவுக்கு குரல் கொடுத்துள்ளார்.

அந்த குரலையும், கவியாவையும் பார்க்கும்போது அப்படியே சித்ராவை பார்ப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Related Posts

Leave a Comment