“குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்”: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

by Web Team
0 comment

சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 4 மண்டலங்கள் மாநகராட்சியிடம் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறத. இந்த சூழலில் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குப்பை மேலாண்மை சரிவர இயங்கவில்லை என மக்கள் புகார் அளித்து வரும் நிலையில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. அத்துடன் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

குப்பை கொட்டுவதற்கு வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் , நட்சத்திர விடுதிகளுக்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் , தியேட்டர்களுக்கு ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ,அரசு அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3ஆயிரம், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் ரூ.500 முதல் ரூ.1000 , பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் , மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் , தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் என குப்பை கொட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுபவர்கள் என்ற அடிப்படையில் குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு ரூ.500, தரம் பிரித்து கொட்டாதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5ஆயிரம், கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் ரூ.2ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம், குப்பை எரித்தால் ரூ.500 முதல் ரூ.2ஆயிரம் அபராம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment