வெள்ளை மாளிகையின் கூடுதல் உறுப்பினர்களாக இந்திய அமெரிக்கர்கள் நியமனம்- ஜோ பிடன் அறிவிப்பு

by Web Team
0 comment

இந்திய அமெரிக்கர்களான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோரை வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக ஜோ பிடன் நியமனம் செய்திருக்கிறார்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்காவின் புதிய அதிபராக 2021ம் ஆண்டு ஜனவரியில் ஜோ பிடன் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தெற்காசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் ஜோ பிடன், அதிபருக்கான அதிகாரத்துடன் பல்வேறு பதவிகளுக்கும் ஆட்களை அவர் நியமனம் செய்து வந்து கொண்டிருக்கிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பிடன் வழங்கி இருக்கிறார். இதில் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் கவுதம், பிடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment