பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்படுவது இவர் தான்… காரணம் என்ன தெரியுமா?

by Web Team
0 comment

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 5 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வாடிக்கை.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில் இந்த வாரம் பழையப்படி கன்ஃபெஷன் ரூமில் ரகசிய நாமினேஷன் நடைபெற்றது.

இதன்படி இந்த வாரம் நாமினேஷனில் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித், கேபி ஆகியோர் இடம் பிடித்தனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி, ஆஜித் மற்றும் கேபி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனிதா தேவையில்லாமல் ஆரி தனது குடும்பத்தை பத்தி தவறாக பேசியதாக காட்ட முயற்சித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதனால் அனிதாவை இந்த வாரம் வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் அனிதாவுக்கு ஓட்டே போட போவதில்லை என்றும் கூறி வருகின்றனர். இதனால் அனிதா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்குள் மூன்று ஞாயிற்றுக் கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் வரும் வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Related Posts

Leave a Comment