பிரதமர் மோடிக்கு புதிய விருது வழங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

by Web Team
0 comment

இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான “legion of merit” விருதை வழங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

பிறநாட்டு தலைவர்களுக்கு அமெரிக்க அதிபரால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று தான் legion of merit.

இந்த விருதை பிரதமரின் சார்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பெற்றுக்கொண்டார்.

இந்திய பிரதமருடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் முன்னாள் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே ஆகியோரும் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.

இந்திய அமெரிக்க உறவை புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றதற்கும் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக உயர்த்தியதற்கும் இந்த விருது வழங்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment