இதுக்கு மேல என்ன வேணும்! சோனு சூட்டுக்கு கோவில் கட்டிய மக்கள்

by Web Team
0 comment

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் சோனூ சூட்.

இவர் கொரோனா ஊரடங்கின் போது கஷ்டப்பட்டு வந்த பலருக்கும் உதவி செய்தார். குறிப்பாக பணிக்காக வேறு மாநிலம் சென்று சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் இல்லாமல் தவித்த ஆயிரக்கணக்கான பேரை சொந்த செலவில் பேருந்துகள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்தார்.

எனவே, மக்களின் கதாநாயகனாக சோனு சூட் மாறினார். இவரிடம் உதவியை பெற்ற பலர் இவரின் புகைப்படத்தை தங்களின் வீட்டில் வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாக வைரலானது. இதைத்தொடர்ந்து அவரை பாராட்டி அவருக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. மத்திய அரசும் இவரை வெகுவாக பாராட்டியுள்ளது.

 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்பதண்டா எனும் கிராமத்தில் அவருக்கு பொதுமக்கள் கோவில் கட்டியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று இந்த சிலை திறக்கப்பட்டது. அப்போது பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து பாடல்களை பாடி தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள். ‘சோனு சூட் எங்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். எங்களின் கடவுள் அவர்தான் என அவர்கள் கூறினர்.

Related Posts

Leave a Comment