பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா.! புதிய வகை வைரஸாக இருக்குமோ என்று அச்சம்

by Web Team
0 comment

கொரோனா தொற்று தீவிரம் குறையாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் பிரிட்டனில் பரவி வரும் புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது என்றும் முந்தையதை விடவும் மிகத் தீவிரமாக பரவுகிறது என்றும் பிரிட்டன் அரசு எச்சரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்தை ஒவ்வொரு நாடுகளாக துண்டித்துக் கொண்டன. புதிய வகை கொரோனாவின் மாதிரிகள் ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் அனைத்து நாடுகளும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. புதிய வகை தொற்று குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பி தனிமைப்படுத்திக் கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது புதிய வகை கொரோனா தொற்று தானா என்று பரிசோதிக்க அவரின் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் தெரிய வரும்.

அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment