பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்

by Web Team
0 comment

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இப்போது வரை உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஏற்கனவே பரவிய வைரஸின் தன்மையை விட இதன் தன்மை 70 சதவீதம் வரை அதிகமாக உள்ளது.

இதனால் பிரித்தானிய மக்கள் கடும் அச்சத்தில் உள்ளன. இதன் காரணமாக லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் நள்ளிரவு முதல் டையர் 4 என்றழைக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரித்தானிய மருத்துவ நிபுணர் கிறிஸ் ஸ்மித், புதிய வைரஸ் பரவலில் இருந்து எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கும் இந்த புதிய கொரோனா தொற்று வகை பரவ வாய்ப்புண்டு.

இந்த கொடிய தொற்றிற்கான எதிர்ப்பு சக்தி என்பது மிக குறுகிய காலமே இருக்கக் கூடும் என்பதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும்

ஏற்கனவே ஒருவரது உடலில் பல வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிலிருந்து உங்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்கலாம்.

ஆனால், கொரோனா தொற்று உட்பட பல வைரஸ்களில் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறுகிய காலத்தை உடையதாக இருக்கும். எனக்கு தெரிந்து கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், அடுத்த 48 நாட்களுக்குள் மீண்டும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் வரை மக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவும், அரசு அறிவித்துள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் மிகவும் சரியாக கடைபிடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment