பிரான்ஸ் பிரித்தானியாவுடனான தனது எல்லையை மூடிவிட்டதால் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் அதிகாலையிலேயே கடைகள் முன் குவிந்தனர்.
லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் புதுவகை கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதையடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி நான்காவது அடுக்கு பொதுமுடக்கத்துக்கு சென்றது.
இந்த தகவல் வெளியானதும் கொரோனா நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக, பிரான்ஸ் பிரித்தானியாவுடனான தனது எல்லையை நேற்றிரவு 11 மணிக்கு மூடிவிட்டது.
இந்நிலையில், பிரித்தானிய லொறிகள் பிரான்சுக்குள் நுழைய அந்நாடு விதித்துள்ள இந்த தடையால், பண்டிகைக்காலத்தில் உணவுப்பொருட்களை கொண்டுவருவது தடைப்படும் என உணவுத்துறையில் உள்ளவர்கள் எச்சரித்தனர்.
குறிப்பாக, சாலட் செய்வதற்கான கீரைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள், பிரக்கோலி மற்றும் காலிபிளவர் ஆகிய, பண்டிகைக்காலங்களில் இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர்கள் எச்சரித்தனர்.
இதனால், பதற்றமடைந்துள்ள பிரித்தானியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அஞ்சி அதிகாலை 5.50 மணி வாக்கிலேயே பொருட்களை வாங்க கடைகள் முன் குவிந்தனர்.
சில கடைகள் திறக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே ஷெல்ப்கள் காலியாகியுள்ளதை வெளியாகியுள்ள படங்களில் காணலாம்.