தொடர்ந்த மரணங்கள்! சோகம் நிறைந்த 2020! கண்ணீர் விடவைத்த சம்பவங்கள்? இத்தனை பேரா? வெளியே தெரியாத விசயங்கள்!

by Web Team
0 comment

கடந்த 2019 ல் வரப்போகிற 2020 ஆம் ஆண்டு மற்ற வருடங்களை விட மிகுந்த முக்கியத்துமான ஆண்டாகவே பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பு பெரும் ஏமாற்றத்தில் கொண்டு போய்விட்டது எனலாம். ஆம் சினிமா உலகம் பெரும் பாதிப்புகளை சந்தித்தது.

பல நடிகர்கள், நடிகைகள், சினிமா பிரபலங்கள், சின்னத்திரை கலைஞர் என இறந்து போனார்கள். தற்கொலை சம்பவங்களும் இதில் அடங்கும்.

அவ்வகையில் அதிகம் பேசப்பட்ட மரணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்….

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
உலகம் முழுக்க இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் கண்ணீரில் ஆழ்த்தி நிகழ்வு தான் இந்த பாடும் நிலாவின் மரணம். கொரோனா தொற்றால் இவரின் உயிர் கடந்த செப்டம்பர் 25 ல் காற்றோடு கலந்தது. இவ்வருடத்தில் பெரும் துக்க நிகழ்வு இவரின் இழப்பு தான்.

சீரியல் நடிகை சித்ரா
அதிரடியாக வந்த விஜய்யின் 65வது பட தகவல்- சிவகார்த்திகேயன் போட்ட டுவிட் என்ன தெரியுமா?
VDO.AI
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில், திருமண பெண்ணாக தற்கொலை செய்து கொண்டது இன்னும் பலராலும் தாங்க முடியாத ஒன்று.

சிரஞ்சீவி சார்ஜா
கன்னட சினிமாவின் புகழ் பெற்ற இளம் நடிகரான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7 ல் மாரடைப்பால் காலமானார். திருமணமாகி முதல் குழந்தை கர்ப்பத்தில் இருந்த போதே உலகை விட்டு சென்றது மிக பரிதாபம்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்
பாலிவுட் சினிமாவின் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14 ல் தன் வீட்டில் படுக்கையறையில் தற்கொலை செய்துகொண்டார். போதைப்பொருள் புழக்கம், பட வாய்ப்புகள் மறுப்பு என காரணங்கள் சொல்லப்பட்டது.

ரிஷி கபூர்
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான இவர் ரத்தப்புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் 30 ல் காலமானார்.

இர்ஃபான் கான்
திறமையான கை தேர்ந்த கலைஞரான நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 29 ல் காலமானார்.

திவ்யா பட்நாகர்
பிரபல நடிகையான திவ்யா பட்நாகர் கொரோனா நோய் தொற்றால் கடந்த டிசம்பர் 7 ல் உயிர் பிரிந்தார்.

வாஜித் கான்
பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான வாஜித் கான் கடந்த ஜூன் 1 ல் காலமானார்.

சரோஜ் கான்
பிரபல நடன இயக்குனரான சரோஜ் கான் மாரடைப்பால் கடந்த ஜூலை 3 ல் காலமானார்.

ஹாலிவுட் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் Sean Connery, Black Panther Chadwick Boseman என பலரும் இந்த ஆண்டில் காலமானார்கள்,

ஹிந்தி சினிமா இன்னும் பிரபலமல்லாத பலரும் இதே ஆண்டில் இருக்கிறார்கள். அதெல்லாம் பார்த்தோமானால் இந்த பட்டியல் 75 ஐ தாண்டுமாம்.

Related Posts

Leave a Comment