பொங்கல் பரிசு ரூ.2500 தர அரசாணை வெளியீடு

by Web Team
0 comment

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்க அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.

2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.

இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு ரூ.2500 வழங்கப்பட உள்ளது.

Related Posts

Leave a Comment