சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்!

by Web Team
0 comment

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள விழா 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.

வரும் 30-ந்தேதி அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், மதியம் 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் வரும் 31ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

Related Posts

Leave a Comment