தேமுதிக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு

by Lifestyle Editor
0 comment

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2011இல் நான் எம்எல்ஏவாக இருந்திருந்தால் அப்போதைய அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அடித்து நொறுக்கி இருப்பேன் என தேமுதிக மாநில இலக்கிய அணி செயலாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக மாநில இலக்கிய அணி செயலாளரும், வளரும் நடிகருமான ராஜேந்திரநாத், 2011 சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி தலைவர் தனக்கு சீட் வழங்கப்பட்டு தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் விஜயகாந்தை கை நீட்டி பேசிய அமைச்சர் அப்போதைய அதிமுக அமைச்சரான நத்தம் விஸ்வநாதனை அடித்திருப்பேன் என பேசினார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் நிலையில் இவரது பேச்சு அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி அமைத்த நிலையில் 2016 ஆம் ஆண்டு தேமுதிக தனியாக மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. பின்னர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என தேமுதிக அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment