நடிகர் சூர்யா சூரரை போற்று படத்தின் மூலம் ஆரவாரமில்லாமல் அமைதியாக சாதித்து காட்டிவிட்டார். அவரின் இந்த வெற்றி அவரை தரக்குறைவாக விமர்சித்தவர்களுக்கு விடை கொடுத்துவிட்டது. தீபாவளி ஸ்பெஷலாக இந்த சூரரை போற்று படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
நல்ல விமர்சனங்களும், வரவேற்பும், தொடர் பாராட்டு மழையாக படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. அடுத்து சூர்யா யாருடன் இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுவருகிறது.
படத்தின் வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி காணிக்கை செலுத்தும் விதமாக சென்னையில் புகழ்பெற்ற பாரிஸ் காளிகாம்பாள் கோவிலில் இயக்குனர் சுதா மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
இந்த ஆலயத்தில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு வேண்டிய நிறைவேறும், வெற்றி கிட்டு என்ற நம்பிக்கை பக்தர்கள் மனதில் ஆழமாக உள்ளது.