75 வயதான முதியவரைக் கொன்ற இளைஞர்!

by Lifestyle Editor
0 comment

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் வசித்து வந்த முதியவர் பொன்ராம் (75), கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். மரணத்தில் மர்மம் இருப்பதாக இவரது மகள் கொடுத்த புகாரின் பேரில், பொன்ராம் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அருண்குமார் (26) என்னும் இளைஞருடன் அடிக்கடி முதியவரின் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது.

அருண்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தான் ஒரு நபருடன் ஓரினச் சேர்க்கையில் இருந்ததாகவும் அந்த நபருக்கு திருமணமாகி விட்டதால் மதுபோதையில் முதியவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அதற்கு அவர் மறுத்ததால் கொலை செய்து விட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓரினச் சேர்க்கைக்காக முதியவர் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment