ஊழியரிடம் வாக்குவாதம் செய்த எஸ்.ஐ.- ஆல் பரபரப்பு

by Lifestyle Editor
0 comment

சென்னை

மதுரவாயலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியர்களிடம், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அடுத்த மதுரவாயல் தனலட்சுமி நகரில் உள்ள உணவகத்திற்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், உணவு சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டபோது, மதுபோதையில் இருந்த அந்த நபர், தான் ஒரு உதவி ஆய்வாளர் என்றும், தன்னிடம் பணம் கேட்பதா? என்றும் ஆபாசமாக பேசியுள்ளார். தொடர்ந்து, கடையின் அடுப்பு மற்றும் போர்டுகள் வெளியே இருப்பதாக கூறி கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட அந்த நபர், போர்டை தூக்கி உள்பகுதியில் வைத்துவிட்டு, கடை ஊழியர்களை எச்சரித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

இந்த காட்சிகளை ஊழியர் ஒருவர் செல்போனில் பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த விசாரணையில் தகராறில் ஈடுபட்ட நபர் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அரிநாத் என்பது தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனிடையே, அரிநாத் மதுபோதையில் அங்குள்ள ஓட்டல்களில் உணவு அருந்தி விட்டு, பணம் கேட்பவர்களை மிரட்டி செல்வதாக உணவ உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment