தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

by Lifestyle Editor
0 comment

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் குமரி, மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிவர், புரெவி என அடுத்தடுத்த புயல்கள் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வை புரட்டி போட்டது. குறிப்பாக கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தது. புயல் பாதிப்பு தற்போது பெருமளவு தணிந்திருக்கிறது. மீண்டும் இது போன்ற பாதிப்பு நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்திருக்கிறது. புயல் ஓய்ந்தாலும், வடகிழக்கு பருவ மழைக்காலம் இன்னும் முடிவடையாததால் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment