தேர்தலில் போட்டியிடும் பிக்பாஸ் பிரபலம்!

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 70 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நிகழ்ச்சியில் இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது. தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, ஷிவானி, ஆஜித், கேப்ரியல்லா, ரம்யா என உள்ளே போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசன் வார இறுதியில் டிவி முன்பு தோன்றுகிறார். போட்டியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இதற்கிடையில் அவர் மக்கள் நீதி மய்யத்தில் கட்சி பணிகளையு, தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 போட்டியாளரான காயத்திரி ரகுராம் பி.ஜே.பி கட்சியில் உறுப்பினராக இணைந்து எதிர்கட்சிகாரர்களின் செயல்களை கண்டிப்பதோடு கடுமையாக சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்தார்.

நடித்துக்கொண்டே டான்ஸ் மாஸ்டராகவும் இ ருக்கும் அவர் பாரதிய ஜனதா கட்சிக்காக சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் வருகிற தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் நான் பிரச்சாரம் செய்வேன். இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். சினிமாவில் இருந்து கொண்டே அரசியில் தொடர்ந்து ஈடுபடுவே என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment