ஒரு போலீஸ் அதிகாரி தன்னுடைய பெண் கான்ஸ்டபிள் மனைவியை பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார்
ஒடிசாவின் கலஹந்தி மாவட்டத்தில் உள்ள கெசிங்கா காவல் நிலையத்தில் ஒரு பெண் கான்ஸ்டபிள் பணிபுரிகிறார் .அவர் மல்கங்கிரி மாவட்டத்தில்அக்ஷய குமார் நாயக் என்ற டிஎஸ்பி யை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அப்போது முதல் அந்த போலீஸ் அதிகாரி நாயக், அவரின் மனைவியான பெண் போலீஸ் கான்ஸ்டபிளை பலவகையிலும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் .அவரை பல பேரோடு இணைத்து பேசுவாராம் .அது மட்டுமல்லாமல் அந்த பெண் கான்ஸ்டபிளின் போட்டோவை கண்டவர்களோடு இணைத்து வைத்து ஆபாசமாக போட்டோவை தயாரிப்பாராம் .பின்னர் அந்த போட்டோவை ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் .அது மட்டுமல்லாமல் அவரின் பிள்ளைகளுக்கும் அந்த போட்டோவை அனுப்பியுள்ளார் .
அவரின் குழந்தைகள் வெளியூரில் படிக்கிறார்கள் .அவர்கள் படிக்கும் அந்த கான்வென்டுக்கு அந்த போட்டோக்களை அனுப்பி டார்ச்சர் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் கான்ஸ்டபிள் மன உளைச்சலுக்கு ஆளானார் .
அதன் காரணமாக அவரின் கணவரான அந்த போலீஸ் அதிகாரி நாயக் மீது , உயர் அதிகாரிகளிடம் தன்னை அந்த டிஎஸ்பி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை புரிந்ததாக புகார் கூறினார் .பிறகு உயர்அதிகாரிகளால் அந்த டி.எஸ்.பி, காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பட்டார் ., அதன் பிறகு ஒடிசா உயர் நீதிமன்றம் டிசம்பர் 23 வரை அவரை கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது .மேற்கொண்டு அவரை விசாரித்து வருகிறார்கள் .