எல்.முருகனுக்கு அதிமுக எச்சரிக்கை!

by Lifestyle Editor
0 comment

கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவதால் பாஜக தலைமை அவரை நீக்க வேண்டியிருக்கும் என அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அவர், “மத்திய ஆட்சியில் மட்டும் தான் பாஜக. தமிழகத்தைப் பொருத்தவரையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என எல் முருகன் கூறியது தவறு. மத்திய அமைச்சர்களே அதிமுக முதல்வர் வேட்பாளரையே முன்னிறுத்த ஒப்புக் கொண்டனர். எடப்பாடி தான் முதல்வர். அவரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தற்போது இருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என்பதையும் பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார். எல்.முருகனின் இந்த கருத்து அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியாரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாஜக தனித்து போட்டியிட வேண்டியது தான் என அதிமுகவினர் கூறியிருந்தனர். இத்தகைய சூழலில், எல்.முருகனின் கருத்துக்கு புகழேந்தி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment