ஆண்டுக்கு 10 குழந்தைகள்… மொத்தம் 150 குழந்தைகள் ஆனாலும் இன்னமும் நிறுத்தமாட்டேன்: ஒரு வித்தியாசமான மனிதர்

by Web Team
0 comment

ஆண்டுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை 150 குழந்தைகள் என் மூலம் பிறந்துவிட்டார்கள், என்றாலும் இன்னமும் நிறுத்தமாட்டேன் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் ஒருவர்.

பிரித்தானியாவின் Ilfordல் வாழும் அமெரிக்கரான Joe Donor (50), கொரோனா நேரத்திலும் பிரித்தானிய பெண்கள் சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார்.

அவர்களில் மூன்று பேர் தாயாக இருக்கும் செய்தி அறிந்து, அதுதான் தனக்குக் கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசுகளிலேயே சிறந்த பரிசு என்கிறார் Joe.

தன்னிடம் உயிரணு தானம் பெற்ற பல பெண்கள் தங்களுக்கு குழந்தை பிறந்ததும் தனக்கு குழந்தையின் புகைப்படத்தை அனுப்புவதுண்டு என்று கூறும், Joe சில பெண்கள் இன்னமும் தன்னுடன் தொடர்பிலிருப்பதாகவும் கூறுகிறார்.

நாளைக்கு அந்த குழந்தைகள் தங்கள் ஒன்று விட்ட சகோதர சகோதரிகளை தேடும்போது அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் Joe.

Joe, அமெரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து உயிரணு தானம் செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment